---Advertisement---

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 13 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: August 5, 2024
---Advertisement---

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகின்றது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இதையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை , நீலகிரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Tina Dutta's Bold Statement: No Need for a Husband, I Can Do It on My Own

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.