---Advertisement---

வயநாடு நிலச்சரிவு… 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்… வெளியான அறிவிப்பு..!

By Sri
Published on: August 3, 2024
---Advertisement---

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 நெருங்க உள்ளது. தொடர்ந்து மீட்ப பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

பல்வேறு தரப்பினர் வயநாட்டிற்கு உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையாக வயநாடு மாவட்டம் மற்றும் நிலம்பூர் தாலுகாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாடு வசதியை வழங்க இருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்திருக்கின்றது.

அத்துடன் பயனாளர் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் பெற முடியும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று நாட்கள் இலவச சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க