---Advertisement---

மாதத் தொடக்கத்தில் அதிகரிக்கும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

By Sri
Published on: August 1, 2024
---Advertisement---

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்கவரி குறைப்பு காரணமாக சில நாட்கள் தங்கம் விலை குறைந்து இருந்தது. இருப்பினும் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 அதிகரித்து விற்பனையாகி வந்தது.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை அதன் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் குறைந்து வந்தது. ஏனென்றால் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கமான இன்று சற்று அதிகரித்து இருக்கின்றது.

தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 51,440 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்திருக்கின்றது. கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 91.70 க்கும் கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.