---Advertisement---

ஆடிக்கிருத்திகை விழா… திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு… சேகர்பாபு அதிரடி அறிவிப்பு…!

By Sri
Published on: July 26, 2024
---Advertisement---

திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக சேகர் பாபு அறிவித்து இருக்கின்றார்.

திருத்தணி சுப்பிரமணிய கோவில் ஆடி கிருத்திகை திருவிழா டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா நாளை முதல் 31ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் பிகே சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஆடி கிருத்திகை மற்றும் திருப்பதி திருவிழா ஆகிய இரண்டு விழாக்களின் போது சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூபாய் 200 ஐ குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி திருத்தணியில் நடைபெறும் ஆடி கிருத்திகை மற்றும் திருப்பதி திருவிழா நாட்களில் சிறப்பு தரிசன நுழைவு கட்டணம் ரூபாய் 200 இல் இருந்து குறைந்து ரூபாய் 100-க நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.