---Advertisement---

கருவாடு மீனாகாது.. கரந்த பால் மடிப்புகாது.. அதிமுகவில் சசிகலாவ சேத்துக்க முடியாது-ஆர்.பி உதயகுமார்…!

By Sri
Published on: July 18, 2024
---Advertisement---

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆர்வி உதயகுமார் கூறியிருக்கின்றார்.

திமுக ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய் உயிரிழப்பு மற்றும் போதை பொருள் நடமாட்டம் குறித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு பேசியிருந்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேசினாலே தூக்கி வெளியில் போட்டு  விடுகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் வழங்கி வருகிறோம். தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தி பேசுகிறார்கள்.கண்டிக்கத்த தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என்று கூறும் ஸ்டாலின் ஆட தெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஒப்புக்கொள்ள மறுக்கின்றார். நாங்கள் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தரக்குறைவாகவும் பேசவில்லை.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் பதிவு... அமைச்சர் மா சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!

நடந்ததை கூற விரும்புகிறேன், 33 ஆண்டு அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். நீங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள். நீங்கள் நல்லது செய்திருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள். சொத்தை வைத்து ஏதாவது செய்திருந்தால் அதே பகுதி சொர்க்க பூமியாக மாறி இருக்கும்.

கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் என்று கூறியவர் தற்போது மீண்டும் அரசியலில் குதிக்கிறேன் என ஏன் சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஜானகி அம்மாள் எடுத்த முடிவு முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலனடைவார்கள் என எடப்பாடி கூறியதை அவர் செய்தால் நன்றாக இருக்கும். கரந்த பால் மடி புகாது, கருவாடு எப்போதும் மீனாகாது என்பது போல அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்” என அவர் கூறியிருக்கின்றார்

.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.