---Advertisement---

அதிமுக நிர்வாகி படுகொலை…கவுண்சிலர் கணவர் கைது…காவல் துறை அதிரடி…

Published on: July 4, 2024
Admk
---Advertisement---

சேலம் மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகி கொலை சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வந்ததால் பரபரப்பு அதிகரித்தது.

சேலம் மாநகர் கொண்டாலம்பட்டி பகுதி செயலாளராக இருந்தவர் சண்முகம்.நேற்று இரவு இவர் தனது வீட்டிற்கு போய்க் கொண்டிருந்த போது சஞ்சீவராயன்பட்டியில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த வழியிலிருந்த சிசிடிவி கேமராக்களும், லைட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தாக சொல்லப்படுகிறது.

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதை அடுத்து சம்பவம் நடந்த இடத்தில் சண்முகத்தின் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.

Salem
Salem

அங்கே வந்த காவல் துறையினருடன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இறந்தவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரனையை மேற்கொண்ட காவல் துறையினர் அதே பகுதியை சார்ந்த திமுக கவுண்சிலரின் கணவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சதீஷிடம் தீவிர விசாரனை நடத்தப்பட்டு வரும் நேரத்தில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருத்தப்படும்  மேலும் சிலரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

 

சண்முகம் வெட்டி கொலை செய்யப்பட்தை அடுத்து அங்கே கூடிய உறவினர்கள் வலியுறுத்தியதன்படி அதே பகுதியை சார்ந்த திமுக கவுண்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் நீடித்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Ajith Kumar at the Circuit Paul Ricard in France, preparing for the Michelin Le Mans Cup Round 2 with his racing team

“தல அஜித்தின் கார் பந்தயம்!” இன்று இரவு 10.45 மணிக்குத் தொடக்கம் – பிரான்சில் பறக்கப்போகும் AK64 நாயகன்!

Director Sundar C explaining his reasons for stepping away from the Rajinikanth movie in a recent interview.

Cinema Update: “யாரும் காரணமில்லை, பிரஷர் தான் காரணம்!” ரஜினி படத்திலிருந்து விலகியது குறித்து சுந்தர் சி பரபரப்பு பேட்டி!

Director Rathna Kumar talking about his decision to skip Lokesh Kanagaraj's Coolie to focus on his upcoming film 29.

Movie Update: “லோகேஷுடன் இல்லை.. ராகவா லாரன்ஸுடனும் இல்லை!” ரத்ன குமாரின் அதிரடி முடிவு.. ’29’ படத்திற்காகப் பெரிய தியாகம்!

Actor Ajith Kumar and director Aadhik Ravichandran sharing a moment during the script discussion and pre-production phase of their upcoming film #AK64.

Industry News: “விஜய் சாருக்காக அஜித்தின் மாஸ் முடிவு!” AK64 படப்பிடிப்பில் நடந்த அதிரடி மாற்றம்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Actress Aishwarya Lekshmi speaking to reporters in Nellai about her support for actor Vijay's political party Tamilaga Vettri Kazhagam.

Politics Update: “தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லையே!” விஜய்க்காக வருத்தப்படும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி – வைரல் பேட்டி!

Official announcement poster of actor Vimal’s upcoming web series Warrant from the world of Vilangu.

OTT Update: “விலங்கு உலகத்திலிருந்து மீண்டும் ஒரு த்ரில்லர்!” மே 22-ல் வெளியாகும் விமலின் ‘வாரண்ட்’ – ரசிகர்கள் குஷி!