---Advertisement---

IPL 2019: பஞ்சாப் அணி கவிழ்ந்தது! சென்னை அணி வென்றது!!

By Sri
Published on: April 7, 2019
kxip vs csk 2019
---Advertisement---

சென்னையில் நடந்த IPL 2019ல் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் மாற்றம் ஏற்ப்பட்டு, டுபிளிசிஸ் மற்றும் வாட்சன் ஓப்பனிங் இறங்கினர்.

டுபிளிசிஸ் பட்டையை கிளப்ப 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். வாட்சன் 26 (24), தோனி 37 (23), ராயுடு 21 (15) ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 160/3 ரன்கள் எடுத்தது.161 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் 7 நிலைக்கவில்லை. ராகுல் நிதானமாக ஆட, சர்ஃபராஸ் கான்னும் இணைந்து இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிகபட்சமாக சர்ஃபராஸ் 67 (59), ராகுல் 55 (47) அடித்தனர்.. இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 138/5 என எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால், சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், சென்னை அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.