---Advertisement---

நல்ல குணமாகி வீடு திரும்பும் குழந்தை இசக்கியம்மாள்

Published on: December 4, 2021
---Advertisement---

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கியம்மாள் என்ற சிறுமி சில மாதங்களுக்கு முன் தவறுதலாக ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டுவிட்டாள்.

நன்றாக அழகாக இருந்த அந்த சிறுமி ஒரு கட்டத்தில் உடல் உருக்குலைந்து போய்விட்டாள். நிறைய இடங்களில் மருத்துவம் பார்த்தும் கேட்கவில்லை.

இறுதியாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதல்வரின் உத்தரவுப்படி அந்த சிறுமிக்கு தொடர் சிகிச்சையளித்ததில் அந்த சிறுமி குணமடைந்து வருகிறார்.

இந்த நிலையில் மெதுவாக குணமடைந்து வரும் அந்த சிறுமிக்கு 5 லட்சம் ரூபாயை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

உடன் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.