இன்று கார்த்திகை1. இன்று முதல் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்ல இருக்கின்றனர். பொங்கல் முடியும் வரை ஐயப்பன் கோவில்களில் கடும் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் தமிழக பக்தர்களின் வசதிக்காக இங்கிருந்து சபரிமலைக்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்படுகிறது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரிமலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், 2 மாத காலத்துக்கு அங்கேயே இருந்து தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர் 3 செவிலியர் கொண்ட மருத்துவக் குழு இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.













