ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது புகழ்பெற்ற கனகதுர்கா கோவில், இப்பகுதிகளில் அடிக்கடி சில இளைஞர்கள் மிக மண்டைக்கனமாக பைக் ஓட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பைக்கை வைத்து மிக அதிவேகமாக செல்வதும் ஸ்டண்ட், வீலிங் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
உச்சக்கட்டமாக ஒருவர் ஓடும் வண்டியில் நின்று சாகசம் புரிவதும் துப்பாக்கியை கையில் வைத்து இருந்ததும் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துர்க்கையம்மன் கோவில் பகுதியில் சென்ற இளைஞர்கள் பல்சர், கேடி எம் பைக்குகளில் இது போல் சென்று துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுடுவது போல் செய்துள்ளனர்.
வண்டி பதிவெண்களை இவர்கள் அகற்றியதால் இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.













