---Advertisement---

ஏழுமலையானை தரிசிக்க இந்த மாதம் மட்டும் இவ்ளோ பேர் புக்கிங்கா

Published on: September 25, 2021
---Advertisement---

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் மிக புகழ்பெற்றது. அனுதினமும் விஐபிக்கள் தரிசிக்க வருவதும், பிரமாண்டமாக எந்நேரமும் இங்கு அன்னதானம் நடப்பதும், ஏழை பணக்காரர்கள் என்ற பேதமின்றி பல லட்சம் பக்தர்கள் தினமும் ஏழுமலையானை காண வரிசையில் முண்டியடிப்பதும் வழக்கமான நிகழ்வுதான்.

எல்லா கோவில்களும் நடை சாற்றப்பட்டாலும் திருப்பதியில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே நடை சாற்றப்படும். எந்த நேரமும் இங்குள்ள வெங்டாசலபதி பக்தர்களுக்கு பிஸியாக காட்சி கொடுத்து கொண்டே இருக்கிறார்.

புரட்டாசி மாதம் வரும் பிரம்மோற்சவம் இங்கு மிகவும் விசேஷமாக நடக்கும் ஒரு விழாவாகும். இந்த மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க அதிக பக்தர்கள் விரும்புவர் அதனால் அக்டோபர் மாதம் விற்க வேண்டிய 2.40 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 1 கோடி பேர் முயற்சி செய்திருக்கிறார்களாம் .

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.