பிரதமர் மோடியின் இல்லத்தில் கேரள சிறுமி வழங்கிய கொய்யா மரக்கன்று ஒன்று நடப்பட்டது. இந்த மரக்கன்றுவை நடிகர் சுரேஷ் கோபி வழங்கியுள்ளார்.
இந்த மரக்கன்று குறித்து கருத்து கூறியுள்ள சுரேஷ்கோபி
கேரளாவில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயலட்சுமி என்ற மாணவி இந்த கொய்யா மரக்கன்றுவை பரிசாக வழங்கி டெல்லி சென்று பிரதமரிடம் ஒப்படைக்க கோரினார். கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள குளநாடா கிராமத்தை சேர்ந்த அறிவாற்றல் மிக்க இளம் மாணவி ஜெயலட்சுமி வளர்த்த மரக்கன்று, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடப்படவுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மரக்கன்று நடப்படும் என மோடி அப்போது என்னிடம் உறுதி அளித்தார். இவ்வாறு அதில் நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார். மாணவி ஜெயலட்சுமி, சிறந்த மாணவிக்கு அளிக்கப்படும் ‘கர்ஷக திலகம்’ என்ற கேரள மாநில அரசின் விருதை பெற்றவர் ஆவார்.
கொய்யா மரக்கன்றை பிரதமர் மோடியிடம் வழங்குவது போன்ற புகைப்படத்தை நடிகர் சுரேஷ் கோபி, தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.







