நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் ராகவன் வீடியோ விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
சமீபத்தில் பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
இது குறித்து பேசிய சீமான், உலகத்தில் நடக்காத விசயத்தையா அவர் செய்து விட்டார். ஒருவரின் தனிப்பட்ட விசயத்தில் இது போல செய்வதே தவறு.முதலில் வீடியோ வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும்.
அவருக்கு தெரியாம அவர் படுக்கையறை கழிவறைல வச்சு எடுத்துட்டு வர்றது முதல்ல அதுதான் சமூக குற்றம் என கூறிய சீமான்
சட்டசபையிலேயே அப்படி செய்திருக்காங்க. இவர் தன்னோட வீட்ல தனிப்பட்ட முறையில் இருந்ததற்கு இப்படி செய்யக்கூடாது என சீமான் கேட்டுள்ளார்.
"தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்?" – சீமான் பரபரப்பு பேட்டி!#SunNews | #Seeman | @SeemanOfficial pic.twitter.com/7lNmw6l7cv
— Sun News (@sunnewstamil) August 30, 2021













