இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த 1983ம் ஆண்டில் இருந்து அகதிகள் அதிக அளவு இந்தியா வர துவங்கினர்.குறிப்பாக இலங்கை தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள் ராமேஸ்வரம் வர துவங்கினர். இப்படி வர துவங்கியவர்களை பாதுகாக்க இந்தியாவில் பல்வேறு இடங்களில் முகாம் அமைத்தனர்.
இவர்கள் நீண்ட காலங்களாகவே அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இலங்கை அகதிகள் முகாம் என்பது இனி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் தெரிவித்துள்ளார்.













