மதுரையில் உள்ளது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மிகப்பழமையான ஆதின மடம். இந்த மடத்தின் 292வது குருமஹா சன்னிதானமாக இருந்தவர் அருணகிரி. இவர் ஒரு காலத்தில் பத்திரிக்கை நிருபராக இருந்தவர்.
உடல்நலக்குறைவால் நேற்று அண்ணாநகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் நேற்று இவர் உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இன்று மாலை 3 மணியளவில் மதுரை ஆதினமடத்துக்கு சொந்தமான தினமணி டாக்கீஸ் அருகே உள்ள இடத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நடக்க இருக்கிறது.













