தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி என்பவர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார். இவர் சென்றிருந்த சமயம் இவரது அக்கா திடீரென உயிரிழந்தார் இந்த தகவலை தனலட்சுமியிடம் குடும்பத்தார் தெரிவிக்கவில்லை. சொன்னால் போட்டியில் விளையாட முடியாமல் போய்விடும் என்று சொல்லாமல் மறைத்து விட்டனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நேற்று திருச்சி விமான நிலையம் திரும்பிய தனலட்சுமி தனது அக்கா வரவேற்க வரவில்லையே என கேட்டுள்ளார். அப்போது அவரது அக்கா உயிரிழந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் விமான நிலையத்திலேயே கதறி அழுதார்.
#NEWSUPDATE | தடகள வீராங்கனைக்கு காத்திருந்த சோகம்!#SunNews | #DhanalakshmiSekhar | #Olympics | #Athletics pic.twitter.com/uTMSCobRYC
— Sun News (@sunnewstamil) August 9, 2021













