---Advertisement---

தொடர் மதவிழாக்கள் உத்தரகாண்ட் அரசுக்கு நீதிமன்றம் குட்டு

Published on: May 11, 2021
---Advertisement---

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் கும்பமேளா விழா நடந்தது இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதும், பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் நடந்த நிகழ்வுகளாகும்.

இந்நிலையில் அடுத்தடுத்து மத சம்பந்தமான விழாக்களை நடத்த உத்தரகாண்ட் அரசு தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து ஒரு பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ மாநிலத்தில் கரோனா அதிகரிப்பைப் பார்த்து நாங்கள் எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வதுபோல் செயல்பட முடியாது.

கடந்த ஓர் ஆண்டாகியும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசு ஏன் முழுமையாகத் தயாராகவில்லை. இதில் 3-வது அலை வரலாம் எனவும் மத்தியஅரசு எச்சரித்துள்ளது.

கும்பமேளா திருவிழாவின் பாதிப்பிலிருந்து இன்னும் மாநிலம் மீளவில்லை. அதற்குள் புர்னாகிரி மேளா நடந்து, அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ளார்கள். கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்கு இதுபோன்ற திருவிழாக்கள் காரணமா.

இதில் ஆண்டு தோறும் நடக்கும் சர்தாம் யாத்திரையையும் நடத்துவதில் மாநில அரசு தயாராகி வருகிறது. இந்த திருவிழாவில் மக்களை அனுமதித்தால், கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும்” எனத் தெரிவித்தனர்.

 

அதற்கு அரசு தரப்பில் பதில் கூறுகையில் “ சர்தாம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. கோயில்களை பராமரிக்கும் மேலாண்மை நிர்வாகம், பாதுகாப்பு வழிமுறைகளை யாத்திரைக்காக வெளியிட்டுள்ளது” எனத் கூறினர்

அதற்கு நீதிபதிகள் , நீங்கள் வகுத்த பாதுகாப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவார்கள் என எவ்வாறு உறுதியளிக்க முடியும். இதேபோன்றுதான் கும்பமேளாவில் சொன்னீர்கள், ஆனால், பாதுகாப்பு வழிமுறை பின்பற்றப்பட்டதா. கரோனா வைரஸ் பரவல்அதிகரித்து வரும்போது எவ்வாறு மதநிகழ்வுகளை அனுமதிப்பது.

மாநிலத்தின் அனைத்து வளங்களையும் ஒன்றாக இணைத்து கரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் போர் செய்து வருகிறோம், அனைத்து சக்திகளையும் திரட்டி போராட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன்படி குடிமக்களின் உயிரைக் காப்பது அரசின் கடமை. ஒவ்வொரு சொட்டு உழைப்பையும் அரசு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

மாநில அரசு தரப்பில் கரோனா பரவலைச் சமாளிக்க எவ்வாறு அரசு தயாராகியுள்ளது, மாநிலத்தில் மருத்துவமனைகள் நிலை, படுக்கை வசதிகல், ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதிகள் அமர்வு, “ கரோனா 2-வதுஅலையின் உச்சம் இன்னும் மாநிலத்துக்கு வரவில்லை.மாநில அரசு முன்னெச்சரிக்கை தயாரிப்பு வேகம் போதாது. 3-வது அலையை மக்களும், அரசும் சேர்ந்து பணியாற்றி முறியடிக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும், குறிப்பாக கரோனா ஹாட்ஸ்பாட் மையங்களான ஹரித்துவாரில் பரிசோதனை மையங்களை உருவாக்கலாம். கிராமப்புறங்களில் மொபைல் டெஸ்டிங் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer launch banner of legendary director Singeetam Srinivasa Rao's upcoming movie Sing Geetham.

மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பு!.. மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ள ‘சிங் கீதம்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட விசுவல்ஸ்!

Official release date announcement poster of Actor Karthi's spy action thriller Sardar 2 directed by PS Mithran.

“மிஷன் ஆஃப் எ லைஃப்… டைம்!”.. கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட பிரம்மாண்ட ஸ்லைடு.. செப்டம்பர் 10-ல் மிரட்டலாக வரும் ஏஜெண்ட்!

Official announcement title look first look banner of Superstar Rajinikanth's Dharman produced by Kamal Haasan RKFI banner.

“தர்மமே வெல்லும்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாக வெளியீடு.. ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட மெகா மாஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Arya sharing official updates about Sarpatta Parambarai 2 shooting timeline during Anantha Kaadu movie press meet.

“கபிலன் மீண்டும் வர்றான்!”.. ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு எப்போது?.. ‘அனந்தன் காடு’ பிரஸ்மீட்டில் ஆர்யா உடைத்த மெகா ரகசியம்.. குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பும் பா. ரஞ்சித் டீம்!

Official announcement poster of Vikram Prabhu 26th movie presented by Romeo Pictures and composed by Yuvan Shankar Raja.

“காஸ்ட்லியஸ்ட் ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா!”.. விக்ரம் பிரபுவின் 26-வது படத்திற்குப் போடப்பட்ட மெகா பட்ஜெட் பிளான்.. நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி மியூசிக் ட்ரீட்!

Official announcement poster of Superstar Rajinikanth's Thalaivar 173 produced by Kamal Haasan featuring a blood-stained scalpel knife.

“ரத்தக் கறையோடு களம் இறங்கும் சூப்பர்ஸ்டார்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் இன்று வெளியீடு.. கரியரிலேயே முதல்முறையாக ரஜினி எடுக்கும் அந்த புதிய அவதாரம்!