தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. நறுக்கு தெறித்தாற்போல் மனதில் உள்ளதை உள்ளபடி யதார்த்தமான கோபத்துடன் பேசி விடுவார் இவர்.
எதிலும் வித்தியாசமாக இருக்கும் இவர் தமிழக அமைச்சர்களில் மஞ்சள் சட்டை அணிந்து வலம் வருபவர் இவர் ஒருவரே.
நேற்று விருதுநகர் மாவட்டம் வந்த முதல்வரின் பிரச்சார வாகனத்தில் புட்போர்ட் அடித்து இவர் நின்று கொண்டு வந்தது பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.













