தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடலில் நீந்தி சாதனை புரிவது சவாலான விசயம். பல வருடங்களுக்கு முன் குற்றாலீஸ்வரன் என்பவர் இங்கு நீந்தி சாதனை படைத்தார்.
இந்த கடல் பகுதியில் நீந்துவதற்கு ஹைதராபாதை சேர்ந்த ஷியாமளா என்ற பெண் முயற்சி செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளான கவிதா என்பவரும் இவரும் நண்பர்கள் ஆவர் அதன் அடிப்படையில் இலங்கை மற்றும் இந்திய அரசின் உதவி உடனே கிடைத்தது.
ஷியாமளாவும் இலங்கை கடற்படையின் உதவியுடன் தனுஷ்கோடி தலைமன்னார் இடையிலான தூரத்தை நீந்தி கடந்தார்.
இதன் மூலம் உலகிலேயே இந்த கடல் பகுதியை நீந்தி கடந்த 2-வது பெண் என்ற பெருமையை பெற்றார் ஷியாமளா. இது குறித்து ஷியாமளா கூறும்போது,’’இலங்கை கடல் பகுதி அமைதியாக இருந்தது. இதனால் சுலபமாக நீந்த முடிந்தது. ஆனால், கடைசி 5 மைல் தூரம் இந்திய கடல் பகுதியில் நீந்துவது பெரும் சவாலாக இருந்தது. முதல்வரின் மகள் கவிதா, ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் திரிபாதி மற்றும் இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே மற்றும் இலங்கை, இந்திய கடற்படை அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.













