தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு. சரியாக ஒரு மாதம் கழித்து வாக்குகள் எண்ணப்படுகிறது. அதாவது வரும் மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு விடும்.
இந்த நிலையில் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுபவர்களை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
நேர்காணலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நடத்தி வருகின்றனர்.













