---Advertisement---

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில்

Published on: December 17, 2020
---Advertisement---

கவுண்டமணியுடன் ஆரம்ப காலங்களில் நட்சத்திர நாயகன், ஜல்லிக்கட்டுக்காளை உட்பட பல படங்களில் காமெடி செய்தவர் ஷகிலா. ஒரு கட்டத்தில் மலையாளக்கரையோரம் கரை ஒதுங்கிய  ஷகிலா டீன் ஏஜ் பையன்களை உசுப்பேற்றும் விதமான படங்களில் நடித்து பலரை கவர்ந்தார்.

சிறிய பட்ஜெட்டில் படுக்கையறை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாக ஷகிலாவின் படங்கள் இருந்ததால் அடிக்கடி இவரது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்தது.

இதனால் கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் மலையாள சினிமா வசூல் பாதிக்கப்படுகிறது என ஷகிலாவின் படங்களை கடுமையாக எதிர்த்தனர். அதிகமான மலையாளப்படங்களில் நடித்து இளசுகளை கவர்ந்த ஷகிலா தற்போது அது போல அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதில்லை விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

தற்போது தமிழில் “ஷகிலா” என்ற பெயரில் பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த சம்பவத்தால் வாழ்க்கையை புரட்டிப் போட்ட வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூற இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார்.

இப்படம் நேரடியாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!