தென்னிந்தியத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான சரித்திரப் படமான ‘ரணபலி’ (Ranabaali) திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில், பான்-இந்தியா தளத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். 1854 முதல் 1878 வரையிலான பிரிட்டிஷ் காலத்துச் பின்னணியைக் கொண்டுள்ள இப்படம் ஒரு அதிரடியான வரலாற்றுப் போராட்டக் கதையாக உருவாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் இணை அஜய்-அதுல் (Ajay-Atul) இசையமைத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ரணபலி மற்றும் ஜெயம்மா ஆகியோரின் அழகான உலகைக் காணவும், இப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகளைப் பெரிய திரையில் அனுபவிக்கவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்முடன் காத்திருக்கின்றனர்.













