---Advertisement---

சிறையில் 260 பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை… ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்…!

By Sri
Published on: September 14, 2024
---Advertisement---

மத்திய ஆப்பிரிக்காவில் சிறையில் இருக்கும் 260 பெண் கைதிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை ஏற்பட்டு வருவதாக ஐநா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.

மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோ ஜனநாயக அரசின் மஹாலா நகரில் மத்திய சிறை சாலை ஒன்று அமைந்திருக்கின்றது. இங்கு ஆண் கைதிகள் மட்டும் இல்லாமல் பெண் கைதிகளும் இருக்கிறார்கள். 3,000 பேர் அடைக்க வசதியுள்ள இந்த சிறையில் தற்போது 12,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான கைதிகள் அங்கு இருப்பதால் அடிக்கடி கைதிகளிடையே மோதல், பாலியல் அத்துமிரல் ஆகியவை அரங்கேறி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 129 பேர் உயிரிழந்தார்கள். சிறை உடைப்பு முயற்சி குறித்த போலீஸ் சார்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சிறை வன்முறையின் போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் ஆண்கள் அத்துமீறி நுழைந்து ஏராளமான பெண் கைதிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கின்றது. சிறை வன்முறை சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆண் சிறை கைதிகள் பெண்கள் சிறைக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 348 பெண்களின் 268 பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதிலும், 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர் தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கின்றார். இது குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!

யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுவதை அறிவிக்கும் போஸ்டர். / Official poster announcing the trailer launch event for the Yash starrer 'Toxic' in Bengaluru on August 8.

Massive Excitement Builds Up: யஷின் ‘டாக்சிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பேட்டி ஒன்றில் மைக்ரோஃபோன் முன்னிலையில் புன்னகையுடன் பேசும் இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!

Rio Raj shooting for Varuthapadatha Valibar Sangam 2.

“விவிஎஸ் இஸ் பேக்!” – வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படப்பிடிப்பு ஆரம்பம்! ரியோ ராஜ் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டும் அதிரடி!

Director Susi Ganesan making a comeback with Oranda movie.

9 ஆண்டு இடைவெளி: புதிய கதைக் களத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுசி கணேசன்!

Sivakarthikeyan dealing with financial issues and Seyon shooting updates.

அதிர்ச்சி தகவல்: நஷ்டத்தை ஈடுகட்ட விளம்பரங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!