---Advertisement---

அடேங்கப்பா… 16 லட்சம் வழக்குகளா…? தமிழக கோர்ட்டுகளில் வெளியான அறிக்கை…!

By Sri
Published on: September 6, 2024
---Advertisement---

தமிழக கோர்ட்டுகளில் 16 லட்சம் வழக்குகள் தேக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான். நமது நாடு சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முன்பு 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி உருவானது சென்னை ஐகோர்ட். அன்று முதல் நீதி தேவதையின் இருப்பிடமாக திகழ்ந்து வருகின்றது. தன்னுடைய சிறப்பான தீர்ப்பால் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான நீதியை வழங்கி வருகின்றது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்பதுதான் சட்டத்தின் கோட்பாடு. ஆனால் பல வழக்குகள் முடிவுக்கு வருவதில் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. சென்னை ஐகோர்டின் முதன்மை அமர்வு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள கிழமை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 96 ஆயிரத்து 614 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.

சென்னையை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் சட்டம் மூலமாக விண்ணப்பித்து பெற்ற விவரம் இது தெரியவந்துள்ளது. முதன்மை அமர்வு சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 104 சிவில் வழக்குகளும், 24 ஆயிரத்து 591 கிரிமினல் வழக்குகள் என்று 2 லட்சத்து 03, 695 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் கீழமை நீதிமன்றங்களில் பல சிவில் வழக்குகள் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

அதன்படி தமிழக கோர்ட்டுகளில் மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரத்து 540 சிவில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதேபோல 6 லட்சத்து 88 ஆயிரத்து 74 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கிரிமினல் வழக்குகளை விட சிவில் வழக்குகள் தமிழகத்தில் அதிக நிலுவையில் இருந்து வருகின்றது. சென்னை கோர்ட்டை பொருத்தவரையில் நீதிபதி பணியிடங்கள் 75.

இதில் 62 நீதிபதிகள் மட்டுமே இருக்கிறார்கள். 13 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த மாதம் 20ஆம் தேதி வரையிலான நிலவரப்படி அனுமதிக்கப்பட்ட மாவட்ட நீதிபதி பணியிடங்கள் 360. இதில் 87 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகின்றது. காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவாக நிரப்பி தாமதம் என்று நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!

Tamil actor and director Parthiban presenting a special handwritten poem letter to Tamil Nadu CM Vijay during their recent official meeting

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பார்த்திபன் காகிதத்தில் எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

Heartin movie romantic melody song Oru Nodi sung by Anand Aravindakshan and composed by Rajesh Murugesan releasing today at 5 PM.

மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது… டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

Action King Arjun statement from image_e51ce3.png announcing his second daughter's marriage to an American this October and joking about his well-built sons-in-law.

“என் இரண்டு மருமகன்களும் என்னைப் போலவே உயரமா, கம்பீரமா..” இரண்டாவது மகள் திருமண செய்தியை ஜாலியாகப் பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Actress Rashmika Mandanna emotional success portfolio beating actress Nayanthara salary by getting 15 crores for Bollywood movie Cocktail 2.

நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா; புதிய படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம்.. பாலிவுட்டில் உச்சம் தொட்ட ‘நேஷனல் கிரஷ்’!

Raghava Lawrence's daughter Raghavi making her directorial debut with a movie produced by Raghava Lawrence after studying filmmaking in the USA.

தமிழ் சினிமாவில் மெகாஃபோன் பிடிக்கும் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி; அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்யாமல் எடுக்கும் மாஸ் முடிவு!