---Advertisement---

தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்!

By Sri
Published on: April 2, 2019
தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை
---Advertisement---

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அன்று பொது விடுமுறை அறிவித்து அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்தது.அதை தொடர்ந்து, தற்போது, சென்னையில் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனம், இயங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக தேர்தல் ஆணையம், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையடுத்து, வாக்குபதிவின் எண்ணிக்கை உயர வேண்டும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க உத்திரவிட்டுள்ளது.

வாக்குபதிவு அன்று விடுமுறை அளிக்காத, நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாக்குபதிவு அன்று அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.