Latest News
உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கே….ராமதாஸ் பெருமிதம்…
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அன்னியூர் சிவா இந்த வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுமைக்கு கிடைத்துள்ள வெற்றி என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடைத் தேர்தலில் களம் கண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் உண்மையான வெற்றி பெற்றுள்ளது பா.ம.க.தான் என்றார். ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பலம் தான் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவை ஒப்பிட்டு பார்க்கும் போது பா.ம.க. எழுபத்தி ஐந்து சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக சொன்னார். 2026ல் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பா.ம.க. மிகப்பெரிய எழுச்சி பெற்று மிகப்பெரிய அளவிலான வெற்றி பெரும் எனத் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் அரசு அதிகாரிகள் முதல் காவல் துறை வரை விதிமீறல்களை வேடிக்கை பார்த்து வந்ததாக குற்றம் சாட்டினார். அதே போல திராவிட முன்னேற்றக் கழகம் செலவளித்த பணத்திற்கே இந்த வெற்றி என்றார். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதன் விளைவே இந்த வெற்றி என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இடைத் தேர்தலில் களம் கண்ட அன்புமணிக்கு தந்து வாழ்த்துக்களை தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா தனது டெப்பாஸிட்டை இழந்துள்ளார்.