---Advertisement---

அந்த ஓட்டுக்கள் எல்லாம் எங்களுடையது…உரிமை கொண்டாடிய முன்னாள் அமைச்சர்…

Published on: July 11, 2024
---Advertisement---

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் இன்று காலையில். செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயக்குமார் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்தும் விளக்கமளித்தார்.

விக்கிரவாண்டி சட்டன்ற முன்னாள் உறுப்பினர் புகழேந்தியின் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்குப் பதிவு நேற்று அமைதியாக  நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த கேள்வியை எழுப்பினார்.

Jeyakumar
Jeyakumar

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் என்பத்தி மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என கேட்கப்பட்ட செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார் ஜெயக்குமார்.

பதிவான வாக்குகளை மட்டுமே தான் எல்லோரும் பார்க்கின்றார்கள், பதிவாகாமல் போன மீதமுள்ள வாக்குகள் பற்றி யோசிக்கவில்லை என்றார். பதிவாகாமல் போன மீதமுள்ள ஓட்டுக்கள் தான் அதிமுகவின் ஓட்டுக்கள் என்றும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இடைத் தேர்தலை புறக்கணித்ததால் தான் மீதமுள்ள சதவீத வாக்குகள் பதிவாகவில்லை என்ற கோணத்தில் பதிலளித்தார்.

மேலும் இது பற்றிய முழு விவரங்களும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்கு பிறகே தான் தெரிய வரும் என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவைப் போலவே இந்த தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகமும் புறக்கணித்திருந்தது. ஆளும் திமுகவிற்கு போட்டியாக  பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கியது.  இந்த இருகட்சிகளும் அதிமுகவினரின் வாக்குகளை அதிகமாக எதிர்பார்த்திருக்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?