---Advertisement---

ஜொமட்டோ நிறுவனத்தின் பதிலால் அதிருப்தி

Published on: October 19, 2021
---Advertisement---

இந்தியாவில் சிறந்த புட் டெலிவரி நிறுவனமாக கருதப்பட்டு வருவது ஜொமட்டோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஃபுட் ஆர்டர் செய்யும்போது சமீப நாட்களாக இந்த நிறுவனம் பல சர்ச்சைகளை கொடுத்து வருகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் ஜொமட்டோவில் ஆர்டர் செய்தபோது அவர் ஆர்டர் செய்த உணவு சரியான முறையில் அந்த இளைஞருக்கு வராததால் அவர் கஷ்டர் கேரை அணுகினார். அங்கு ஹிந்தியில் விளக்கமளிக்கப்பட்டது அதை ஏற்றுக்கொள்ளாமல் அது குறித்து கேட்டதற்கு,

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அதை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் அந்த இளைஞர் அதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளார் . இதனால் இந்த நிறுவனத்தை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.