---Advertisement---

உலகில் முதன்முறையாக போர்டபிள் மருத்துவமனை… 15 அடி உயரத்தில் நிலை நிறுத்திய இந்திய ராணுவம்… வைரலாகும் வீடியோ..!

By Sri
Published on: August 18, 2024
---Advertisement---

இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்தியன் ராணுவம் பரிசோதித்துள்ளது. காடாக இருந்தாலும், மலையாக இருந்தாலும் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப் எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்ட்டபிள் மருத்துவமனை உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையாக அறிமுகமாகி இருக்கின்றது. BHISHM என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது பேரிடர் காலங்களில் மனிதாபிமான நெருக்கடி சமயங்களில் சிக்கலான நிலப்பரப்புகளில் உபயோகிக்க ஏதுவாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியா ஆயுதபடையும், வான்படையும் இணைந்து பாராசூட் மூலம் லடாக்கின் 15 அடி உயரத்தில் உள்ள பகுதியில் இந்த போர்டபிள் மருத்துவமனையை எடுத்துச் சென்று நிலை நிறுத்தி பரிசோதனை செய்திருக்கின்றது.

இது ஒரு சாதனை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. மேலும் ராணுவத்தினர் மருத்துவமனையை 15 அடி உயரத்தில் உள்ள பகுதிகளில் நிலை நிறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க