---Advertisement---

உணவு ஆர்டர் செய்யறது கூட பாதுகாப்பில்லாததுதான்… டெலிவரி நபரின் செய்கை… விவரமாக சொன்ன பெண்…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

உணவு ஆர்டர் செய்யப்பட்டு அதனை எடுத்து வந்த டெலிவரி முகவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று ஒரு பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் நடந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது “கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் கனமழை பெய்து வந்தது.  இதனால் சோமாட்டோவில் காபி ஒன்றை ஆர்டர் செய்தேன். ஆனால் என்னுடைய ஆர்டர் தாமதமாக தான் வந்தது. தாமதமாக வந்தாலும் மழை பெய்ததால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டேன்.

ஸ்வேதாங் ஜோஷி என்ற நபர் தான் என்னுடைய ஆர்டரை கொண்டு வந்தார். மேலும் தாமதமானதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார் .பின்னர் தனது பாதத்தில் அடிபட்டதாக அவர் கூறிக் கொண்டே இருந்தார். இதனால் டார்ச் அடித்த பாதத்தை பார்க்க முயன்ற போது அவரின் பிறப்புறுப்பு வெளிப்பட்டது.

அப்போது அந்த நபர் சிரித்துக் கொண்டே கேலியாக தன்னிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனடியாக இதுகுறித்து டொமேட்டோ நிறுவனத்திற்கு தெரிவித்ததாகவும் அவர்களின் பதில் மேலும் தன்னை துயரப்படுத்தியதாக தெரிவித்திருந்தார். அதிகாலை ஒரு மணிக்கு யாரும் பணத்தை திரும்ப பெறுவதற்கு சோமாட்டோ வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

எனக்கு நடந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று கேட்பதாக கூறினார்கள். மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார்கள். ஆனால் தற்போது வரை என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்று அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது கூட பாதுகாப்பற்றது தான் என்று அந்த பெண் பகிர்ந்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vishal in a raw intense look from his directorial debut film Magudam teaser released by Super Good Films.

Vishal’s Raw Ambition: “30 வருஷ திரையுலக கனவு.. விஷாலின் வெறித்தனமான ஆக்ஷன் இயக்கம்!”… வெளியானது ‘மகுடம்’ படத்தின் அதிரடி டீசர்! ஜூலையில் தியேட்டர் ரிலீஸ்!

The terrifying deadite transformation sequence from Hollywood supernatural horror movie Evil Dead Burn directed by Sebastien Vanicek.

Bloodiest Family Reunion: “இதய பலவீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!”… மிரட்டலான பேய் அவதாரம்! வெளியானது ‘ஈவில் டெட் பர்ன்’ தமிழ் ட்ரைலர்! தியேட்டர் ரிலீஸ் தேதி இதோ!

Director AR Murugadoss planning a new commercial action entertainer with a young rising star using a script previously written for Silambarasan TR.

STR Rejected Script Route: “சிம்புவுக்கு எழுதிய மரண மாஸ் கதை!”… மாஸ் கமர்ஷியலுக்கு திரும்பும் ஏ.ஆர்.முருகதாஸ்! இளம் ஹீரோவுடன் புதிய அதிரடி ஆக்ஷன் சம்பவம்!

Director Shankar planning a quick fast-paced action thriller with young heroes in 70 days before his 1000 crore magnum opus Velpaari trilogy.

1000Cr Budget Blueprint: “அவதார் பாணியில் வேள்பாரி உலகம்!”… பிரம்மாண்ட பட்ஜெட்டை பிடிக்க இயக்குநர் சங்கர் போடும் செம பிளான்! 70 நாட்களில் ஒரு குவிகி படம்! ஜூலையில் அதிரடி அனௌன்ஸ்மென்ட்!

The mortal remains of legendary director Bharathiraja kept for public homage at his Theni farmhouse with heavy police security for state honors funeral.

Heavy Security Alert: தேனி பண்ணை வீட்டில் இமயம் பாரதிராஜா உடல்! கண்ணீரில் கிராம மக்கள்… முதல்வர் உத்தரவால் 700 போலீசார் குவிப்பு! முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

South Indian commercial action movie Peddi crossing 345 crores gross at the worldwide box office.

Box-Office Champion: பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் மெகா வேட்டை! 345 கோடி வசூலைக் கடந்து ‘பெத்தி’ மிரட்டல் சாதனை… பாக்ஸ் ஆபீஸ் சாம்பியன்!