---Advertisement---

தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், மற்றும் பல பரிசுகள்

Published on: October 10, 2021
---Advertisement---

மதுரையில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங்மெஷின், மொபைல் போன், குக்கர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 24.45 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கிராமங்களில் 63 சதவீதம் பேரும், மாநகராட்சி பகுதியில் 55.74 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
5-வதுகட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.மதுரை மாவட்ட கிராமங்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும்வகையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம பஞ்சாயத்துகளில் தடுப்பூசி போட்டால் சைக்கிள், மிக்ஸி, குக்கர் குலுக்கல் முறையில் வழங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியிலும் இதேபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.