---Advertisement---

விஜய் கட்சி கொடியில் இருக்கும் யானை… பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் கொடுத்திருந்த நிலையில் அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சி சார்பாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது கட்சியின் கொடி மற்றும் பாடல் இரண்டையும் அறிமுகம் செய்தார் விஜய். நடிகர் விஜய் கட்சி கொடியில் மேலும் கீழும் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் கொடியின் நடுவில் வாகை பூவும், அதன் இருபுறமும் காலை உயர்த்திய நிலையில் இரண்டு போர் யானையிகளும் 28 நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை தங்கள் கட்சியின் சின்னம் என்று அதை நீக்க வேண்டும் என்று கூறி பகுதன் சமாஜ் கட்சி புகார் கொடுத்திருந்தது.

இந்நிலையில் கட்சி கொடியில் யானை இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கொடுத்துள்ளது. அதில் அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெறும் சின்னங்கள் உருவங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ அங்கீகாரமோ கொடுப்பது கிடையாது. ஆனால் கொடிக்கு விதிமுறைகள் உண்டு.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Jana Nayagan Leaked Shock : இணையத்தில் கசிந்த விஜய் படக் காட்சிகள் - அதிர்ச்சியில் படக்குழு!

அதை உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!

Editorial visual featuring Silambarasan TR playing a police officer in his upcoming film.

மீண்டும் காக்கி உடையில் சிம்பு: ‘ஒஸ்தி’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பின் அதிரடி போலீஸ் அவதாரம்!

Editorial visual featuring the title and first look reveal of the film Manikanda.

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: மாஸாக வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி!

Editorial visual featuring music updates for Balakrishna's NBK112.

பாலய்யா – கொரட்டாலா சிவா கூட்டணியின் ‘NBK112’: அனிருத்துக்கு பதில் ஜி.வி. பிரகாஷ்? ஹாட் சினிமா அப்டேட்!