நேற்று மாலை திடீரென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் அதை முறையாக பதிவு செய்துள்ளார் அகில இந்தி தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அக்கட்சியை பற்றிய செய்திகள் வெளியில் வந்தது.
இதற்கு பதிலளித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இது தான் தான் ஆரம்பித்திருக்கிறேன் விஜய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை அவர் ஆரம்பிக்க சொல்லவில்லை என்னுடைய விருப்பத்தின் பேரில் ஆரம்பித்துள்ளேன் விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என தெரியாது என தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்த விஜய் தன் தந்தை ஆரம்பித்துள்ள கட்சி விசயமாக எதுவும் தெரியாது எனவும் அரசியல் தொடர்பாக அவர் ஆரம்பிக்கும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுப்படுத்தாது எனவும் என் தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் பணியாற்றவோ இணையவோ வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் விஜய்.
தந்தையும் மகனும் மாற்றி மாற்றி குழப்புவதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.







