இன்று பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடக்கிறது.இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும் உள்ள வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடக்கும்.
தமிழ்நாட்டில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
வழக்கமாக சொர்க்கவாசல் திறப்பை காண அதிகாலையிலேயே ஸ்ரீரங்கத்துக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.
முதல்நாளே பலரும் இரவே கோவிலில் வந்து தங்கி விடுவர். இந்த வருடம் கொரோனாவுக்காக பல தடைகள் உள்ளதால் அதிகம் கூட்டம் கூடி விடும் என்பதால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமின்றி குறைவான பக்தர்களுடன் விழா நடந்தது.
இதனால் பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.













