சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்து உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை இக்கோவிலில் கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவேரி போன்ற நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு ஸ்வாமிக்கு பயன்படுத்தப்பட்டது.
இது போல அறுபடை வீடுகளிலும் உள்ள புண்ணிய தீர்த்தங்கள், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு கும்பாபிசேகத்துக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
இன்று காலை இரண்டாம் கால பூஜை தொடங்கி 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறுகிறது. மாலை 5.30மணிக்கு ஒரு பூஜை தொடங்கி இரவு 8.30மணிக்கு நிறைவு பெற இருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது.













