நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமாக இருப்பவர் உதயநிதி இவர் தனக்குரிய இயல்பான பேச்சில் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தூ வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் அருப்புக்கோட்டையில் பேசிய இவர் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்ட இருப்பதாக அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை வெறும் செங்கல் மட்டும்தான் என பேசினார். இந்த நிலையில் இதை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார் உதய். ஒரு செங்கல் மட்டுமே வைத்து அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து கிண்டல் செய்து பேசி வருகிறார் உதயநிதி. ஒரு செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி எல்லோரிடமும் காண்பித்து வருகிறார் இவர்.













