---Advertisement---

தமிழகத்தில் 25 சுங்கசாவடிகளில்… இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு…!

By Sri
Published on: September 1, 2024
---Advertisement---

தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என்று இரண்டு முறை கட்டணம் மாற்றியமைக்கப்படுகின்றது.

தேர்தல் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம் 36 சுங்க சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. ஐந்து சதவீதம் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகின்றது. அதன்படி 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் 5 முதல் 150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Soori's intense look in the new poster of Mandaadi movie released on Tamil New Year.

Soori Mandaadi Poster : “கடல் வேட்டைக்கு ரெடியான சூரி” – தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான ‘மண்டாடி’ போஸ்டர்; 25 கோடிக்கு விலை போன ஓடிடி உரிமை!

Actress Radikaa Sarathkumar and Director Gopi Nainar's new movie Colony motion poster launch by Vijay Sethupathi.

Gopi Nainar Colony : “அறம் இயக்குனரின் அடுத்த அதிரடி” – ‘தாய் கிழவி’ வெற்றிக்குப் பின் ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘காலனி’; விஜய் சேதுபதி வெளியிட்ட மிரட்டலான மோஷன் போஸ்டர்!

Television actress Alya Manasa sharing a motivational life quote about facing hard days on Instagram.

Alya Manasa Motivation : “பாறைகள் இல்லையென்றால் சத்தம் இல்லை” – கஷ்டமான நாட்களை கடப்பது எப்படி? ஆல்யா மானசா கொடுத்த வைரல் அட்வைஸ்!

Actor Arya during the toughest underwater action sequence shoot for his movie Mr. X.

Arya Mr X : “மிஷன் இம்பாசிபிள் தான் போங்க” – 20 அடி ஆழத்தில் நடுங்கும் குளிரில் ஆர்யா செய்த சாகசம்; மிஸ்டர் எக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியம்!

Director H. Vinoth and actor Karthi planning for the sequel of Theeran Adhigaaram Ondru.

H Vinoth Next : “தீரன் இஸ் பேக்” – கார்த்தியுடன் மீண்டும் இணையும் எச் வினோத்; சூர்யா, தனுஷ் படங்கள் என்னாச்சு? ஷாக்கிங் அப்டேட்!

Music composer Sai Abhyankkar officially announced as the music director for AGS Entertainment's next production.

Sai Abhyankkar AGS : “இனி மியூசிக்ல அதிரடி தான்” – ஏஜிஎஸ் குடும்பத்தில் இணைந்த இசை சென்சேஷன் சாய் அபயங்கர்; அர்ச்சனா கல்பாத்தி மாஸ் அப்டேட்!