---Advertisement---

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இன்றைய நிலவரம் இதோ..!

By Sri
Published on: September 24, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றது.

சென்னையில் கடந்த ஜூலை மாதம் புதிய உச்சமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. அதை தொடர்ந்து அதே 22ஆம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியால் அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு 2200 வரை குறைந்தது. தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே சென்று சவரனுக்கு 51 ஆயிரத்துக்கு கீழே சென்றது.

இது நகை பிரியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்திருக்கின்றது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை கடந்த 10 நாட்களில் தாறுமாறாக உயர்ந்து இருக்கின்றது. கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 960 அதிகரித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து இருக்கின்றது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7000 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் விலை 160 உயர்ந்த 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி விலை 98 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.