---Advertisement---

55 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி… இன்றைய நிலவரம் இதோ…!

By Sri
Published on: September 16, 2024
---Advertisement---

தங்கம் விலை இன்று 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருவது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் தினம் தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கடந்த சில தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதன் பின்னர் மத்திய பட்ஜெட் மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கம் விலை மளமளவென குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை வெகுவாக குறைந்து ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கு கீழேயும் சென்றது. ஆனால் இந்த சந்தோஷம் கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் நீடித்தது. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது.

வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. பின்னர் சனிக்கிழமை தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரனுக்கு 55 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன்... தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியாவின் நிதேஷ் குமார்...!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 040 விற்பனையாகி வருகின்றது. மேலும் ஆபரண தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து 6,880 விற்பனையாகி வருகின்றது. கிராமிக்கு 1 ரூபாய் உயர்ந்து 98 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?