---Advertisement---

கணவர்கள் முட்டாள் சோம்பேறிகள்… வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை… மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட் நிறுவனம்…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

கணவர்கள் முட்டாள் சோம்பேறிகள் என்று கூறும் வகையில் விளம்பர வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் தற்போது flipkart நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி இ-காமஸ் நிறுவனங்களில் ஒன்று பிலிப்கார்ட் நிறுவனம். தங்களின் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு தள்ளுபடி நாட்களை அறிவித்து வருடா வருடம் நடத்தி வருகின்றது. அவ்வாறு பிலிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்ஸ் என்ற ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 6-ம் தேதி வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிக் பில்லியன் டேஸ் விளம்பரத்திற்காக ப்ளிப்காட் வெளியிட்டுள்ள வீடியோ தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த அனிமேஷன் வீடியோவில் கணவர்கள், சோம்பேறிகள், துரதிஷ்டம் பிடித்தவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கும் வகையில் வீடியோ இருந்ததால் சர்ச்சையாகி இருக்கின்றது.

கணவர்களுக்கு தெரியாமல் மனைவிகள் எப்படி ரகசியமாக ஹேண்ட் பேக்குகளை வாங்குகிறார்கள் என்பது தொடர்பாக அந்த வீடியோ ப்ரொமோஷனுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வீடியோவுக்கு சமூக வலைதள பக்கங்களில் கடும் கண்டனங்கள் இருந்தன என்று ஆண்கள் நல சங்கமும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த வீடியோவை நீக்கிய flipkart நிறுவனம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கங்களிலும் மன்னிப்பு கேட்டுள்ளது flipkart நிறுவனம்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!