---Advertisement---

லட்டு வீடியோ… பரிதாபங்கள் youtube சேனல் மீதான புகாரை திரும்ப பெரும் பாஜக…!

By Sri
Published on: September 29, 2024
---Advertisement---

லட்டு தொடர்பாக சர்ச்சையான வீடியோவை வெளியிட்ட பரிதாபங்கள் youtube சேனல் மீது பாஜக புகார் கொடுத்திருந்த நிலையில் அதை திரும்ப பெற்றுள்ளது.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்துள்ளதாக புகார் எழுந்தது. இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யுடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்திவரும் பரிதாபங்கள் சேனலில் லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது.

ஆனால் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது. தொடர்பாக யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் பரிதாபங்கள் விளக்கம் அளித்தது. அதில் கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான வீடியோ முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இது போல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என அறிவித்திருந்தது. இருப்பினும் இந்த வீடியோவை பலரும் பார்த்திருப்பதால் இந்துக்களின் உணர்வுகள் புண்பட்டதாக கூறி பரிதாபங்கள் youtube சேனல் மீது தமிழக பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லட்டு வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக பேசி மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இதனால் அந்த சேனல் மீதான புகாரை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!