---Advertisement---

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா

Published on: November 9, 2021
---Advertisement---

தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர். கோவில்கள் என்றாலே பொதுவாக அமைதிதான் அதிலும் குறிப்பாக கடற்கரையோரத்தில் ஆன்மிக மணம் கமழ நல்ல தொரு கடற்கரை காற்றை அனுபவித்தபடி முருகனை வணங்குவது மிகவும் நல்ல சூழலாக இருக்கும்.

சூரபத்மனை முருகப்பெருமான் போர் செய்து அவனது தலையை கொய்த இடம் திருச்செந்தூர் ஆகும். அறுபடை வீடுகள் அனைத்திலும் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடந்தாலும், முருகன் அசுரனை சம்பவம் செய்து சம்ஹாரம் செய்த திருச்செந்தூரில்தான் பெரிய அளவில் இந்த விழா நடக்கும்.

கொரோனா கட்டுப்பாடுகளால் இது போன்ற விழாக்களுக்கு  பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை.

இருப்பினும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் சூரசம்ஹார விழா இன்று மாலை நடக்கிறது.

தேவஸ்தானம் சார்பிலும் தனியார் தொலைக்காட்சிகள் சார்பிலும் இவ்விழா நேரலை செய்யப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.