‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘தகப்பன்’ (Thagappan). ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் (Lark Studios) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
மதுரை பின்னணியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், தந்தை – மகன் இடையிலான பாசப் பிணைப்பையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
View this post on Instagram
படத்தின் அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தணிக்கை குழு ‘தகப்பன்’ படத்திற்கு ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது. உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘தகப்பன்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தணிக்கை சான்றிதழ் மற்றும் வெளியீட்டுத் தேதி உறுதியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.













