மத்திய பிரதேச வருவாய் துறை ஒழுங்குவிதிகளின்படி அந்த மாநில அரசு 2 சுற்றறிக்கைகளை வெளியிட்டது. இந்த சுற்றறிக் கைகள் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்த மான நிலங்களின் பத்திரங்களில் அர்ச்சகர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டது.
இதை எதிர்த்து அர்ச்சகர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில அரசின் சுற்றறிக்கைகளை ரத்து செய்தது. இதை எதிர்த்து மத்திய பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, போபண்ணா அமர்வு விசாரித்துநேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:
கோயில் நிலத்தின் உண்மை யான உரிமையாளர் அந்த கோயிலின் கடவுள் மட்டுமே. அர்ச்சகர் கோயில் நிலத்தின் உரிமையாளராக முடியாது. அவர் கோயிலில் பூஜை, வழிபாடுகளை நடத்தலாம். கோயில் சொத்துகளின் மேற்பார்வையாளராக செயல் படலாம்.
எனவே கோயில் சொத்து பத்திரங்களில் அந்தந்த தெய்வங்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும். அர்ச்சகர்களின் பெயர்களை நீக்க வேண்டும். மத்திய பிரதேச அரசு வெளியிட்ட சுற்றறிக்கைகள் செல்லும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேச அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கோயில் சொத்துகள் அர்ச்சகர் களின் பெயரில் இருப்பதால் அவர்கள் அந்த சொத்துகளை முறைகேடாக விற்று வருகின்றனர். இதை தடுக்கவே சொத்து பத்திரங்களில் அர்ச்சகர்களின் பெயர்களை நீக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்தன.













