தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தவர் ஷ்ரவானி. இவர் கடந்த வாரம் வீட்டின் பாத்ரூமுக்கு குளிக்க சென்றவர் திரும்ப வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷ்ரவானி தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.
இந்நிலையில் ஷ்ரவானியின் மரணத்திற்கு அவர் டிக் டாக்கில் பழகிய நண்பர் ஒருவர்தான் காரணம் என சொல்லப்பட்டது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார்
காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் சாய் கிருஷ்ணா ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி தேவராஜ் ரெட்டி, சாய் கிருஷ்ணா ரெட்டி மற்றும் ஆர் எக்ஸ் 100 படத் தயாரிப்பாளர் அசோக் ரெட்டி ஆகிய மூவரும் ஷ்ராவனியின் மீது காதல் கொண்டிருந்ததாகவும், மூவரும் அவரை மிகவும் கடுமையாக லவ் டார்ச்சர் செய்து துன்பறுத்தியதாலேயே ஷ்ராவனி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.







