Latest News
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கின்றது.
தமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் நாளை எழுதி இருக்கிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் 2,763 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களின் முதன்மை கண் பகாணிப்பாளர்கள் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவர்கள் வருவதற்கு அனுமதி உண்டு. இதனால் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கின்றது.
தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்கள் பள்ளிக்கூடங்களாக உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது.