Connect with us

மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடாது..? திருமாவளவன் கேள்வி…!

Latest News

மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடாது..? திருமாவளவன் கேள்வி…!

மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரின் குடும்பத்தார்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செல்லூர் கிராம மக்கள் ஆகியோர் மலர் பாளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேலுக்கு அஞ்சலி செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை ஆதரிக்கின்றன. பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது ஏன் தமிழகத்தில் இருக்கக் கூடாது .

மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கக் கூடாது. மதுவிலக்கு என்ற குறளுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு கொடுக்க வேண்டும். மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும் போது மது கடைகளை மூடுவதில் ஏன் தயக்கம் ஏற்படுகின்றது. மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான். மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். திமுகவுக்கு முரணான கருத்தை நான் கூறவில்லை. மக்கள் கோரிக்கையை தான் முன்வைக்கின்றோம்” என்று திருமாவளவன் பேசியிருக்கின்றார்.

More in Latest News

To Top