Latest News
புத்தகத் திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்… மாவட்ட நிர்வாகம் கொடுத்த விளக்கம்…!
புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவிகள் பக்தி பாடல்களுக்கு சாமியாடிய காட்சிகள் சமூக விடுதலைப் பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பாக புத்தக கண்காட்சி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பெயரில் அரசு மாணவ மாணவிகள் அழைத்துவரப்பட்டார்கள்.
புத்தக கண்காட்சி தொடக்க விழா என்பதால் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது ‘அங்கே இடி முழங்குது’ என்ற கருப்புசாமி பாடல் ஒலிக்கப்பட்டது. கருப்புசாமி வேடமிட்டு ஒருவர் ஆடினார். இந்நிலையில் அங்கிருந்த சில மாணவிகள் சாமியாட தொடங்கினர். சுற்றி இருந்த மாணவர் மாணவிகளும் ஆசிரியர்களும் சாமியாடிய மாணவிகளை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
மாணவிகள் சாமியாடிய காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது, இதில் சில மாணவிகள் மயங்கி விழுந்தார்கள். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து அமர வைத்தார்கள். புத்தகத் திருவிழாவில் பக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு அதற்கு பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பதில் அளித்து இருக்கின்றது. நாட்டுப்புறப்பாடல் ஆன கருப்புசாமி பாடல் நாட்டுப்புற கலைஞர்களால் பாடப்பட்டது. இதற்கு சில மாணவிகள் சாமி ஆடி இருக்கிறார்கள். சிலர் நடனம் ஆடினர். இதில் எந்த விதிமுறைகளும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி முறையாகவே நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.