Latest News

நீடிக்கப்போகும் கன மழை?…இயல்பு வாழ்க்கையை இழந்ததா சென்னை?…

Published on

பருவ நிலை காலங்களை தமிழ் மாதங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இப்போது இருந்து வரும் சூழல் அதிர்ச்சியைத்தான் தரும். பொதுவாக ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் காற்று காலமாக இருக்கும். இந்த மாதங்களில் காற்றின் வேகம் இயல்பை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

தென் – மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்யும் மழையில் வட கிழக்கு பருவ மழையே முதன்மை பெரும். கோடை மழையை இப்போதெல்லாம் பார்ப்பதே அரிது என ஆகி விட்டது.

வரலாற்று பதிவுகளின் படி பார்த்தால் தமிழ் மாதங்களான ஐப்பசி, கார்த்திகையில் தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது மார்கழியிலும் மழை பெய்து அது தை மாதம் வரை நீடித்திருந்திருக்கிறது.

rain

சென்னையை பொறுத்த வரை அதிக மக்கள் தொகை கொண்டுள்ள பெரு நகரம் என்பதால் மழை பொழிவு சற்று அதிகமாக இருந்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விடுகிறது என்ற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தாண்டு கோடை மழையையும் பார்த்து விட்டது சென்னை மாநகரம்.

கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை அதிக சிரமத்திற்கு உள்ளாகியதோடு மட்டுமல்லாமல், இயல்பு வாழ்க்கையை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியதாக சொல்லி வருகிறார்கள்.

மிரட்டி வரும் மழையை கண்டு ஒரு பக்கம் பயந்து விட்டார்கள் சென்னை வாசிகள் என்றுமே சொல்லாம். இரவு நேர பயணங்களின் பாதுகாப்பு வரை அதிகமாக யோசிக்க வைத்து விட்டது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை. இந்நிலையில் இன்று இரவும் சென்னையின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை தனியார் ஆர்வலர் பிரதீப் ஜான் கனித்துள்ளார்.

Trending

Exit mobile version