Latest News
பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது நமது கலாச்சாரம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது பள்ளி மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்தது கண்டிக்கத்தக்கது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்தார்கள்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள் பாததை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என தெரியவில்லை. ஆசிரியர்களை கொண்டாட வேண்டும். நாங்கள் கொண்டாடும் வகையில் யாரும் கொண்டாடியதில்லை. ஆனால் அவர்களின் பாதங்களை கழுவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் இதுபோன்று இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் பாத பூஜை செய்வது நமது கலாச்சாரம் என்பதால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியிருக்கின்றார்.
இது தொடர்பாக பேசியவர் ஆன்மீகம் இல்லாத அரசியல் இப்போது செய்ய முடியாது. பள்ளி கல்வித்துறையில் பல குழப்பங்கள் இருக்கின்றது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆசிரியர்களை பலிகடா ஆக்குகிறார்கள். மேலும் பாத பூஜை நமது கலாச்சாரம் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.